×

ரூ.358 கோடி வைர நெக்லஸ் அணிந்த பிரியங்கா சோப்ரா

மும்பை: சில நாட்களுக்கு மு்ன்பு ரோமின் மிகப்பெரிய நகைக்கடையான பல்கேரியின் 140வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது. இத்தாலியில் இருக்கும் இந்தக் கடை வாட்சுகள், வாசனை திரவியங்கள், தோல் பொருட்கள் ஆகியவற்றுக்கு புகழ்பெற்றது. இந்த விழாவில் புதிய உயர்தர நகை சேகரிப்பு வெளியிடப்பட்டது. அப்போது இந்தக் கடையின் உலகளாவிய தூதரும், பாலிவுட் முன்னணி நடிகையுமான பிரியங்கா சோப்ரா பங்கேற்றார்.

அவர் அணிந்த வைர நெக்லஸ், இந்தக்கடையின் விலையுயர்ந்த ஆபரணங்களில் ஒன்றாகும். இந்த நெக்லஸை செய்து முடிக்க 2,800 மணி நேரமானது. 140 கேரட் வைர நெக்லஸின் விலை ரூ.358 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி ஏற்பாடு செய்த ‘ரோமன் ஹோலி’ கொண்டாட்டம் மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா, ரூ.8 கோடி மதிப்புள்ள நெக்லஸ் அணிந்திருந்தார்.

The post ரூ.358 கோடி வைர நெக்லஸ் அணிந்த பிரியங்கா சோப்ரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Priyanka Chopra ,Mumbai ,Rome ,Bulgari ,Italy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு