×

கீழவளவில் பூத்தட்டு திருவிழா

மேலூர்: மேலூர் அருகில் உள்ள கீழவளவு வீரகாளியம்மன் கோயிலின் பூத்தட்டு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கீழவளவில் வீரகாளியம்மன் கோயிலின் கார்த்திகை மாத திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று காலை ஏராளமான பசுக்களை வைத்து கோ பூஜை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து காலையில் இருந்து மாலை வரை 20 ஆயிரம் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கீழவளவு, வாச்சாம்பட்டி, கம்பர்மலைப்பட்டி உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கைகளில் பூத் தட்டுக்களை ஏந்தி கீழவளவு மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

இவர்களுக்கு முன்னால் கிராமிய கலைஞர்கள் தங்கள் திறமைகளை காட்டியபடி சென்றனர். நூற்றுக்கணக்கான பெண்கள் கைகளில் ஏந்தி வந்த தட்டுக்களில் இருந்த பூக்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. இதனால் விவசாயம் செழித்து நோய் நொடியின்றி சிறந்த வாழ்க்கை அமையும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. கீழவளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : festival ,festivals ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...