×

கர்ப்பிணிகளுக்கான பேஷன் ஷோவில் அமலா பால்

கொச்சி: கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்று கர்ப்பிணிகளுக்கான பேஷன் ஷோ நடத்தியது. இதில் கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பால் கலந்துகொண்டார். கர்ப்ப காலத்தில் பெண்கள் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பேஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க சில பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் ஒருவராக அமலா பாலும் இருந்தார்.

பெண்களுக்காக இதை கண்டிப்பாக செய்வேன் எனக் கூறிய அமலா பால், வெள்ளை நிற தேவதை போன்ற உடை அணிந்து மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தார். பார்வையாளர்கள் கைதட்டி அவரை வரவேற்றனர். இந்த பேஷன் ஷோவில் 105 கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டனர். உலகளவில் அதிக கர்ப்பிணிகள் கலந்து கொண்ட பேஷன் ஷோ என்ற கவுரவம் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது. அமலா பால் பேஷன் ஷோ மேடையில் பூனை நடை நடந்து வந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வௌியிட்டார். இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

The post கர்ப்பிணிகளுக்கான பேஷன் ஷோவில் அமலா பால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Amala Paul ,Kochi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நிமிஷா சஜயன் மீது ரசிகர்கள் சைபர் தாக்குதல்