×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு பணிக்கு வராத அரசு டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை திடீரென ஆய்வு செய்தார். அப்போது பணிக்கு வராத டாக்டர்  மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று காலை மதுரை வந்தார். அங்கிருந்து காரில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நோக்கி சென்றார். செல்லும் வழியில் வாடிப்பட்டி அருகே, நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள அய்யங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார். ஆய்வின்போது சுகாதார நிலைய நோயாளிகள் அறை, மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர், அதிகாரிகள் வருகை குறித்து கேட்டறிந்தார்.அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் டாக்டர் பூபேஷ்குமார் உரிய தகவல் கூறாமல், பணியில் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு இருந்தபடியே தொலைபேசி மூலம் உயரதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  உரிய தகவல் தராமல் பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவ அதிகாரி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்….

The post ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு பணிக்கு வராத அரசு டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Initial Health Center ,Minister ,Ma ,Subramanian ,Vadipatti ,Early Health Station ,Suframanyan ,Center ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக ஆன்மிகப் பயணம் வரவேற்கத்தக்கது: ஜிகே.வாசன்