×

பிறந்தநாள் வாழ்த்துகள்

சென்னை: ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்காக தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, தொடர்ந்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கதையின் நாயகனாக அவர் நடித்துள்ள படம், ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’. இப்படத்தின் கதை எழுதி ஒளிப்பதிவு செய்து ராஜூ சந்ரா இயக்கியுள்ளார். நேற்று அப்புக்குட்டியின் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்தினார். மாதன்ஸ் குழுமம் இணை தயாரிப்பு செய்துள்ளது. முக்கிய வேடங்களில் மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், ஜா ரவி, ரோஜி மேத்யூ ஆகியோர் நடித்துள்ளனர். நவநீத் இசை அமைத்துள்ளார். பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் சார்பில் ரோஜி மேத்யூ, ராஜூ சந்ரா இணைந்து தயாரித்துள்ளனர்.

The post பிறந்தநாள் வாழ்த்துகள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Appukutty ,Raju Chandra ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...