×

தமிழகம் முழுவதும் 26 கூடுதல் எஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 26 கூடுதல் எஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கி பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை போலீஸ் நவீனமயமாக்கல் உதவி ஐஜியாக இருந்த பண்டி கங்காதர் கரூர் மாவட்ட காகிதாபுரம், தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் நிறுவன முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த புக்யா சினேகா பிரியா மதுரை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 6வது பட்டாலியன் கமாண்டன்டாகவும், தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் கூடுதல் எஸ்பியாக இருந்த ஜோஷ் தங்கையா தாம்பரம் மாநகர பள்ளிக்கரணை துணை கமிஷனராகவும், உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 10வது பட்டாலியன் கூடுதல் எஸ்பியாக இருந்த வணிதா மதுரை நகர தலைமையிட துணை கமிஷனராகவும், சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த ராஜாராம் சென்னை மாநகர காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட காவல் மாவட்டமான கொளத்தூர் துணை கமிஷனராகவும், திருப்பத்தூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த குமார் சென்னை மாநகர கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும், சென்னை கணினி பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த ஸ்ரீதேவி திருச்சி நகர தெற்கு துணை கமிஷனராகவும், சென்னை மாநகர மேற்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த மாதவன் கோவை நகர வடக்கு துணை கமிஷனராகவும், தேனி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்த சக்திவேல் சென்னை மாநகர நுண்ணறிவுப்பிரிவு-2 துணை கமிஷனராகவும், சென்னை மாநகர மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த ஆரோகியம் சென்னை மாநகர நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராகவும், சென்னை சிறப்பு பிரிவு சிஐடி கூடுதல் எஸ்பியாக இருந்த ராமமூர்த்தி சென்னை மாநகர நிர்வாக பிரிவு துணை கமிஷனராகவும், உயர் நீதிமன்றம் விஜிலென்ஸ் பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த கீதா சென்னை சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாகவும், மாற்றப்பட்டுள்ளனர்.சென்னை சிறப்பு பிரிவு சிஐடி கூடுதல் எஸ்பியாக இருந்த சீனிவாசபெருமாள் மதுரை நகர தெற்கு துணை கமிஷனராகவும், சென்னை க்யூ பிரிவு சிஐடி கூடுதல் எஸ்பியாக இருந்த மெகலினா ஐடன் சென்னை மாநில குற்ற ஆவணம் காப்பகம் எஸ்பியாகவும், கோவை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்து சிலம்பரசன் கோவை நகர தெற்கு துணை கமிஷனராகவும், தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த கோபி சென்னை மாநகர கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராகவும், திருவண்ணாமலை தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்த ரமேஷ் பாபு சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.விருதுநகர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த சரவணக்குமார் திருநெல்வேலி நகர மேற்கு துணை கமிஷனராகவும், பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த சுஜாதா புதிதாக உருவாக்கப்பட்ட திருச்சி மண்டல சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாகவும், திருச்சி நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த வணிதா திருப்பூர் நகர தெற்கு துணை கமிஷனராகவும், சென்னை மாநகர வடக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த குமார் சென்னை மாநகர மாதவரம் துணை கமிஷனராகவும், தூத்துக்குடி பேராவூரணி காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வராக இருந்த அனிதா புதிதாக உருவாக்கப்பட்ட திருநெல்வேலி நகர தலைமையிட துணை கமிஷனராகவும், ஈரோடு தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்த பாலாஜி புதிதாக உருவாக்கப்பட்ட கோவை சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்….

The post தமிழகம் முழுவதும் 26 கூடுதல் எஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Home Secretary ,Prabhagar ,Chennai ,Home ,Prophet ,
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...