×

கடற்கரைகளை சுத்தம் செய்யும் ரெஜினா

சென்னை: கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் நடிகை ரெஜினா. அவர் கூறியது: எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடுப்பு ஏறுதல். அதை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக SUP மெரினா கிளப்பைச் சேர்ந்த குழுவினரோடு இணைந்து கொண்டேன். அவர்களின் இந்தச் சமூக முன்னெடுப்பு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தது 12 வயதான சிறுவன் அனிஷ் தான். இந்தக் குழுவை வழிநடத்தும் அனிஷ் என்னை இதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார்.

கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதைக் கலங்கடிக்க வேண்டாம். இந்தப் பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன்.

The post கடற்கரைகளை சுத்தம் செய்யும் ரெஜினா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Regina ,Chennai ,SUP Marina Club ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கிரிப்டோ கரன்ஸி மோசடி : ரூ.4 கோடி ஏமாற்றிய 2 பேர் கைது