×

கமலுடன் இணைகிறார் பங்கஜ் திரிபாதி

சென்னை: பாலிவுட்டின் திறமையான நடிகரான பங்கஜ் திரிபாதி, கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்க உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் தக் லைஃப். நாயகன் படத்துக்கு பிறகு கமலும் மணிரத்னமும் 35 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில் இணைகிறார்கள். இதில் சிம்பு, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, லால் உள்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதில் முக்கிய வேடத்தில் பங்கஜ் திரிபாதி நடிப்பது உறுதியாகியுள்ளது. மிர்சாபூர் இந்தி வெப்சீரிஸ் மூலம் பிரபலமானவர் பங்கஜ் திரிபாதி. இந்தியில் லுடோ, மிமி, அங்ரேஸி மீடியம், ஓ மை காட் 2 உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மிர்சாபூரில் வெப்சீரிஸில் இவருடன் நடித்த அலி ஃபசலும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வரும்.

The post கமலுடன் இணைகிறார் பங்கஜ் திரிபாதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Pankaj Tripathi ,Chennai ,Bollywood ,Kamal Haasan ,Mani Ratnam ,Thak Life ,Kamal ,Nayagan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இயக்குனர் மீது திகங்கனா சூர்யவன்ஷி அவதூறு வழக்கு