×

பாகவதர் வாழ்க்கை வெப்சீரிஸ் ஆகிறது

சென்னை: தமிழ்ப் படவுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் எம்.கே.தியாகராஜ பாகவதர் என்கிற  மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர், கடந்த 1934 முதல் 1959ம் ஆண்டு வரை நடிப்பில் பிசியாக இருந்தார். திரையுலகினரால் ‘எம்.கே.டி’ என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட அவர், கடந்த 1910ல் பிறந்து 1959ல் காலமானார். 1934ல் ‘பவளக்கொடி’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி 15 தமிழ்ப் படங்களில் நடித்தார். இதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றன. 1944ல் அவர் நடித்து வெளியான ‘ஹரிதாஸ்’ படம், சென்னை பிராட்வே திரையரங்கில் தொடர்ந்து ஓடி 3 தீபாவளி பண்டிகைகள் கொண்டாடியது. இந்த சாதனையை இதுவரை எந்த இந்திய திரைப்படமும் நிகழ்த்தியது இல்லை. நடிகர், கர்நாடக சங்கீத பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமை கொண்ட அவர், புகழேணியின் உச்சத்தில் இருந்தபோது கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்றார். திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து அவதிப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து இணைய தொடர் உருவாக்கப்படுகிறது. இதை வசந்த் இயக்குகிறார். தற்போது நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது….

The post பாகவதர் வாழ்க்கை வெப்சீரிஸ் ஆகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bhutalakin ,K.K. Mayawaram Krishnasamy Tyagaraja Bhagavadar ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...