×

தோக்காமூரில் தீண்டாமை தடுப்புச்சுவரை அகற்ற கோரிக்கை: கிராம மக்களுடன் திரண்டு சென்று இயக்குனர் கோபி நயினார் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தோக்காமூர் கிராமத்தில் மாற்று சமூகத்தினரால் கட்டப்பட்டுள்ள தீண்டாமை தடுப்புச் சுவரை அகற்றக்கோரி 100-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஆந்திர மாநில எல்லையோரத்தில் தோக்காமூர் கிராமத்தில்100-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தாத வகையில் நிலத்தை சுற்றியும் 80 மீ நீளத்திற்கு தீண்டாமை சுவர் மாற்று சமூகத்தினரால் கட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பட்டியலின மக்கள், கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்ற ஆறாம் திரைப்படத்தின் இயக்குனர் கோபி நயினார், தீண்டாமை சுவரை அகற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி எடுத்து அகற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டத்திற்கு எதிராக வழக்குகள் தொடர்ந்தாலும் அதனையும் சந்திக்க தயாராக இருப்பதாக கோபி நயினார் தெரிவித்துள்ளார். தோக்காமூர், எலார்மேடு, எடக்கண்டிகை என 3 ஊருக்கும் பொதுவானதாக திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். கோயிலுக்கு முன்புறம் உள்ள சுமார் 3 நிலத்தில் தான் பட்டியலின மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்த்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் தீண்டாமை சுவர்களை எழுப்பி பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு மாற்று சமூகத்தினர் இடையூறு செய்வதாக புகார் எழுந்திருப்பதே பிரச்சனைக்கு காரணமாகும்           …

The post தோக்காமூரில் தீண்டாமை தடுப்புச்சுவரை அகற்ற கோரிக்கை: கிராம மக்களுடன் திரண்டு சென்று இயக்குனர் கோபி நயினார் மனு appeared first on Dinakaran.

Tags : Gobi Nayanar Manu ,Thiruvallur ,Thiruvallur District ,Thokkamur Village ,Thirundana Prevention Wall ,Kobi Nayanar ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது