×

ரஞ்சி கோப்பை காலிறுதி மும்பை 647 ரன் குவித்து டிக்ளேர்: சுவேத் – சர்பராஸ் அசத்தல்

ஆலூர்:  உத்தரகாண்ட் அணியுடனான ரஞ்சி கோப்பை காலிறுதியில், சுவேத் பார்கர் – சர்பராஸ் கான் ஜோடியின் அபார ஆட்டத்தால் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 647 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.ஆலூர் கேஎஸ்சிஏ 2வது மைதானத்தில் நடக்கும்  ரஞ்சிக் கோப்பை 2வது காலிறுதியில், உத்தரகாண்ட் அணியுடன் மோதும் மும்பை முதல் நாள் முடிவில்  3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்எடுத்திருந்தது. சுவேத் பார்கர் 104,  சர்பராஸ் கான் 69 ரன்னுடன்  நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.அபாரமாக விளையாடிய இந்த இணை 4வது விக்கெட்டுக்கு 267 ரன் குவித்தது. சர்பராஸ் 153 ரன் விளாசி (205 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழந்தார். ஆதித்யா தாரே 1, ஷாம்ஸ் முலானி 59, தனுஷ் கோடியன் 28 ரன்னில் வெளியேறினர். உறுதியுடன் விளையாடிய சுவேத்  இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவர் 252 ரன் (447 பந்து, 21 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். மும்பை 8 விக்கெட் இழப்புக்கு 647 ரன் என்ற ஸ்கோருடன் (166.4 ஓவர்) முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.உத்தரகாண்ட் தரப்பில்  தீபக் தபோலா 3, அக்ரிம், ஸ்வப்னில், மயாங்க் மிஷ்ரா, கமல் தலா 1 விக்கெட் எடுத்தனர். உத்ரகாண்ட் 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்து திணறி வருகிறது. * பெங்கால் 577/5: பெங்களூருவில் நடக்கும் முதல் காலிறுதியில், முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்திருந்த பெங்கால் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தது. சுதிப், அனுஸ்தூப் 2வது விக்கெட்டுக்கு 243 ரன் குவித்தனர்.  அனுஸ்தூப் 117 ரன், சுதிப் 186 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 41* ரன்னில்  ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறிய அபிஷேக் மீண்டும் களமிறங்கி  61 ரன்னில் அவுட்டானார். இந்நிலையில், மனோஜ் திவாரி – அபிஷேக் போரல் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்தது. அபிஷேக் 68 ரன்னில் ஆட்டமிழந்தார். 2ம் நாள் முடிவில்  பெங்கால் 5 விக்கெட் இழப்புக்கு 577 ரன் குவித்துள்ளது (178 ஓவர்). திவாரி 54, ஷாபாஸ் 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.  * உ.பி. 155 ஆல் அவுட்: உத்தர பிரதேச அணியுடன் ஆலூரில் நடக்கும் 3வது காலிறுதியில், முதல் நாள் முடிவில்  7 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்திருந்த கர்நாடகா நேற்று 253 ரன்னுக்கு  ஆட்டமிழந்தது. ஷ்ரேயாஸ் கோபால் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய உத்தர பிரதேசம் 155 ரன்னில் சுருண்டது. பிரியம் கார்க் 39 ரன் எடுத்தார். 98 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா 2ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்துள்ளது.* ம.பி. முன்னிலை: ஆலூரில் நடக்கும் 4வது காலிறுதியில்  பஞ்சாப்  முதல் இன்னிங்சில் 219 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.  விக்கெட் இழப்பின்றி 5 ரன் என்ற ஸ்கோருடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்த மத்திய பிரதேசம் 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு  238 ரன் எடுத்துள்ளது. யாஷ் துபே 20 ரன், ஹிமான்ஷு மந்த்ரி 89 ரன் எடுத்து மார்கண்டே பந்துவீச்சில் வெளியேறினர். ஷுபம் ஷர்மா 102 ரன், ரஜத் பத்திதார் 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர்….

The post ரஞ்சி கோப்பை காலிறுதி மும்பை 647 ரன் குவித்து டிக்ளேர்: சுவேத் – சர்பராஸ் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Ranji Cup quarter-final ,Mumbai ,Suvet ,Sarbaras ,Ranji Cup ,Uttarakhand ,Suvet Barkar ,Sarbaraz Khan ,Mumbai… ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்