×

ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி

சென்னை: ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிக்கும் படம், ‘பேபி அன்ட் பேபி’. ஜிபிஎஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஜி.பி.செல்வகுமார் தயாரிப்பில் யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் பி.யுவராஜ் வெளியிடுகிறார். ‘குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் இருக்கும்’ என்கிறார் இயக்குநர் பிரதாப். ‘நாளைய தீர்ப்பு’ படத்தில், விஜய்யின் முதல் கதாநாயகியாகவும் மற்றும் ‘பவித்ரா’ படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த நடிகை கீர்த்தனா செல்வகுமார் இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக மீண்டும் திரையில் களமிறங்கியுள்ளார்.

நடிகை பிரக்யா நாக்ரா ஜெய் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கேபிஒய் ராமர், கேபிஒய் தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். டி.பி.சாரதி ஒளிப்பதிவு செய்கிறார்.

The post ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Babu ,Chennai ,Jay ,Sathyaraj ,Yogi Babu ,GP Selvakumar ,P. Yuvraj ,Yuvraj Films ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கான்ஸ்டபிள் நந்தன் ஆகிறார் யோகிபாபு