×

தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே

சென்னை: சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ள ‘எண்ட ஓமனே’ என்ற தமிழ் பாடல் ஆல்பத்தில் ‘கனா’ தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடித்துள்ளனர். கேரளாவிலுள்ள திருமண வீட்டின் கொண்டாட்ட பின்னணியில், வண்ணங்கள் பொழியும் காட்சிகளுடன், மெலடி ஜானரில் உருவாகியுள்ள இப்பாடலை கார்த்திக் ஸ்ரீவடிவமைத்து இயக்கியுள்ளார்.

எஸ்.கணேசன் இசை அமைக்க, கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அசார் நடனப் பயிற்சி அளித்துள்ளார். மற்றும் ஸ்ருதி செல்வம், விக்னேஷ் நடித்துள்ளனர். விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதிய இப்பாடலை சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் இணைந்து பாடியுள்ளனர். கார்த்திக் ஸ்ரீ, ஐஸ்வர்யா சுப்பிரமணி, மகாலட்சுமி சம்பத் தயாரித்துள்ளனர்.

The post தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Darshan ,Anju Kurian ,CHENNAI ,Kana' Darshan ,Sarigama Company ,Karthik ,Kerala ,Kollywood Images ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட்...