×

காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்

சென்னை: ‘உப்பு புளி காரம்’ வெப்சீரிஸ், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகியிருக்கும் ‘உப்பு புளி காரம்’ சீரிஸ், இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஹாட் ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குனர் எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைத்துள்ளார். பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

The post காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Disney ,Ponvannan ,Vanitha ,Ayesha ,Naveen ,Ashwini ,Deepika ,Krishna ,Farina ,Raj Ayyappa ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜூலை 26 முதல் ராதாமோகனின் சட்னி சாம்பார் சீரிஸ் !!