×

பழமொழியை மாற்ற முடியுமா… ஆப்பிளை எலுமிச்சை பழத்துடன் ஒப்பிட்டது தவறு: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை செயலாளர் மறுப்பு

சென்னை: ஆப்பிளை  ஆரஞ்சுடன் கூட ஒப்பிடக்கூடாது என்பது பழமொழி,  இது ஆப்பிளை எலுமிச்சை  பழத்துடன் ஒப்பிட்டுள்ளது தவறு எனறு அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 13லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களுடன் கூடிய கண் பரிசோதனை மையம் மற்றும் ரூபாய் 18லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன அறுவை அரங்கு, நுழைவு வாயிலில் புதிய எல்இடி தகவல் பலகை, கருவிழி தானம் பெறும் மையத்தையும்,ரூ.13 லட்சம் மதிப்பில் புதிய லேசர் சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அறுவை அரங்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.பின்னர், 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து முதுகு எலும்பு முறிந்து நடக்க முடியாமல் இருந்த பெண், தற்பொழுது குணமடைந்துள்ளார். அதற்கு காரணமான மருத்துவர்களை அமைச்சர் பாராட்டினார். இந்நிகழ்வில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக இயக்குநர் தீபக் ஜேக்கப், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொது மருத்துவ துறை இயக்குநர் செல்வ விநாயகம், ஓமந்தூரர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி, மருத்துவர் ஆனந்த் குமார், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் பிஏ1, பிஏ2  வந்தது. அதன் பிறகு பிஏ4 வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் குணமடைந்த  நிலையில், தற்போது பிஏ4 மீண்டும் 4 பேருக்கு  வந்துவிட்டது. கல்வி நிறுவனங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்க துவங்கியது, இதனால் மாதிரிகள் பகுப்பாய்விற்கு  அனுப்பப்பட்டது. அதில் 150 மாதிரிகளின் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதில் 4  பேருக்கு பிஏ4, 8 பேருக்கு பிஏ5 வகை வந்துள்ளது. ஹெல்த் மிக்ஸ் பவுடரை பொறுத்த வரை, நமக்கு டெண்டரில்  கொள்முதல் விலை 460.50 ரூபாய். ஆனால் சந்தை விலை 588 ரூபாய். எனவே இதில் வித்தியாசம் 127.50 ரூபாயாக உள்ளது. அயர்ன் சிரப் பொறுத்தவரை, சந்தை  விலை 112 ரூபாய், கொள்முதல் விலை 74.60 ரூபாய், இதில் வித்தியாசம் 37.35  ரூபாயாக உள்ளது என்றார். அவரை தொடர்ந்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்: ஆப்பிளை  ஆரஞ்சுடன் கூட ஒப்பிட கூடது என்பது பழமொழி, இது, ஆப்பிளை எலுமிச்சை பழத்துடன் ஒப்பிட்டுள்ளது தவறு. அயர்ன் என்பது குழந்தைகளுக்கு கொடுக்க  கூடிய ஒரு பொருள்.ஆனால் இங்கே கொடுக்க கூடிய ஹெல்த் மிக்ஸ் 32 பொருட்களை  உள்ளடக்கியது. இதைதான் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொடுக்க முடியும். ஆவின்  பொருட்களை குழந்தைகளுக்கு தான் கொடுக்க முடியும். இவ்வாறு பேசினார்….

The post பழமொழியை மாற்ற முடியுமா… ஆப்பிளை எலுமிச்சை பழத்துடன் ஒப்பிட்டது தவறு: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை செயலாளர் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : secretary of health ,Annamalai ,Health Secretary ,Dinakaraan ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...