×

சிறுகதையை மையப்படுத்தி உருவாகும் சிற்பி

சென்னை: ஏ.ஆர்.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகுமார், கோதை நாயகி இணைந்து தயாரிக்கும் படம், ‘சிற்பி’. லிங்கா, மாஸ்டர் சரபேஷ், முத்துக்குமார், வினோத் சாகர், அருள் டி.சங்கர், பூமிகா ஷெட்டி, ரோஜாஸ்ரீ, பாப்ரி கோஷ் ஆகியோர் நடிக்கின்றனர். செந்தில் ஜெகந்நாதனின் ‘எவ்வம்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி படம் உருவாகிறது. திரைக்கதை எழுதி சிவகணேஷ் இயக்குகிறார். இவர் ‘சிங்கப்பெண்ணே’, ‘போலீஸ் டைரி’ ஆகிய வெப்தொடர்களையும், கன்னடத்தில் 8 திரைப்படங்களையும் இயக்கியவர்.

கன்னடத்தில் சுதீப் தயாரித்த ‘ஜிகர்தண்டா’, வி.ரவிச்சந்திரன் நடித்த ‘ஆ திருஷ்யா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர், இசைக்கல்லூரி மாணவர் மற்றும் நிறைய விளம்பரப் படங்களை இயக்கியவர். கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் வென்ற தமிழரான இவர் இயக்கும் முதல் தமிழ்ப் படம் ‘சிற்பி’ என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவு செய்ய, தர்மபிரகாஷ் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

The post சிறுகதையை மையப்படுத்தி உருவாகும் சிற்பி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Sivakumar ,Gothai Nayaki ,AR Productions ,Linga ,Master Sarabesh ,Muthukumar ,Vinod Sagar ,Arul D. Shankar ,Bhumika Shetty ,Rojashree ,Bapri Ghosh ,Senthil Jagannathan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது