காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞரின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞரின் 99வது பிறந்தயொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் அடுத்த கிழம்பி கிராமத்தில் நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் தலைமை தாங்கினார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனைகள் குறித்து போசினர். பின்னர், தூய்மை பனியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மிதிவண்டி, டேபிள் பேன், மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சக்கர வாகனங்கள், இஸ்திரி பெட்டி, 99 நபர்களுக்கு மூக்குக் கண்ணாடி உள்பட நலதிட்ட உதவிகளை பொதுமக்களுக்கு உத்திரமேரூர் எம்பி க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம் ஆகியோர் வழங்கினர்.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார், ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி, ராஜசேகர் ஒன்றிய குழு துணைத்தலைவர் திவ்யபிரியா, மாரிமுத்து, துரைசாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்….
The post கலைஞரின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.
