×

தமிழகம் முழுவதும் 7 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 36 பேர் அதிரடியாக பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 7 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 36 பேரை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்ட எஸ்பியாக இருந்த விஜயகுமார் சென்னை மாநகர அண்ணாநகர் துணை கமிஷனராகவும், சென்னை மாநகர வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக இருந்த சுந்தரவதனம் கரூர் மாவட்ட எஸ்பியாகவும், சென்னை மாநகர அண்ணாநகர் துணை கமிஷனராக இருந்த சிவபிரசாத் மதுரை மாவட்ட எஸ்பியாவும், மதுரை மாவட்ட எஸ்பியாக இருந்த பாஸ்கரன் திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாகவும், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக இருந்த அ.பவன் குமார் ரெட்டி சென்னை மாநகர வண்ணாரப் பேட்டை துணை கமிஷனராகவும், கரூர் மாவட்ட எஸ்பியாக இருந்த சுந்தரவடிவேல் ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்பியாகவும், திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக இருந்த சீனிவாசன் திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை கமிஷனராகவும், திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை கமிஷனராக இருந்த சுரேஷ்குமார் திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும், ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக இருந்த கார்த்திக் சென்னை எஸ்பிசிஐடி -1 எஸ்பியாகவும், மதுரை மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த தங்கதுரை ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாகவும், சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இருந்த ஜெயந்தி சென்னை மதுவிலக்கு பிரிவு எஸ்பியாகவும், சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக இருந்த மணிவண்ணன் ஆவடி மாநகர செங்குன்றம் துணை கமிஷனராகவும், திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக இருந்த வருண்குமார் மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்பியாகவும், அயல் பணியில் இருந்து திரும்பிய பேகர்லா செபாஸ் கல்யாண் திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாகவும், சென்னை சைபர் க்ரைம் பிரிவு எஸ்பியாக இருந்த சண்முகபிரியா சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட என்.ஆர்.ஐ. பிரிவு எஸ்பியாகவும், சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக இருந்த கார்த்திகேயன் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாகவும், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த ஓம் பிரகாஷ் மீனா டெல்லி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 8வது கமாண்டன்டாகவும், சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த மோகன்ராஜ் மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனராகவும், கோவை மாநகர வடக்கு துணை கமிஷனராக இருந்த ஜெயசந்திரன் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட எஸ்பியாகவும், கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த செந்தில்குமார் சென்னை மாநகர தலைமையிட துணை கமிஷனராகவும், மதுரை மாநகர தலைமையிட துணை கமிஷனராக இருந்த ஸ்டாலின் சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு -3 துணை கமிஷனராகவும், கோவை மாநகர தலைமையிட துணை கமிஷனராக இருந்த செல்வராஜ் சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராகவும், திருச்சி மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த முத்தரசு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும், மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனராக இருந்த ராஜசேகரன் சென்னை திட்டமிடல் பிரிவு உதவி ஐஜியாகவும், திருநெல்வேலி மாநகர மேற்கு துணை கமிஷனராக இருந்த சுரேஷ்குமார் திருச்சி மாநகர காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தலைமையிட துணை கமிஷனராகவும், சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துறை கமிஷனராக இருந்த ராமர் தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பியாகவும், மதுரை டிஎஸ்பி 6வது கமாண்டன்டாக இருந்த தேஷ்மூக் சேகர் சஞ்சய் சென்னை மாநகர காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சைபர் க்ரைம் பிரிவு துணை கமிஷனராகவும், சென்னை சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாக இருந்த கே.ஸ்டாலின்  சென்னை சைபர் அரங்கம் பிரிவு எஸ்பியாகவும், ஆவடி கமாண்டன்ட் படைப்பிரிவு எஸ்பியாக இருந்த வெண்மதி சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய எஸ்பியாகவும், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய எஸ்பியாக இருந்த விஜயலட்சுமி ஆவடி கமாண்டன்ட் படைப்பிரிவு எஸ்பியாகவும், திருப்பூர் மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த ரவி சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், திருச்சி மாநகர வடக்கு துணை கமிஷனராக இருந்த சக்திவேல் சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும், கோவை மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த உமா சென்னை ரயில்வே எஸ்பியாகவும், சென்னை சைபர் அரங்கம் எஸ்பியாக இருந்த வேதரத்தினம் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும், சென்னை சைபர் க்ரைம் பிரிவு -2 எஸ்பியாக இருந்த அருண் பாலகோபாலன் சென்னை சிபிசிஐடி, சைபர் க்ரைம் பிரிவு எஸ்பியாகவும், சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இருந்த அசோக் குமார் சென்னை சைபர் க்ரைம் பிரிவு -2 எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* தாம்பரம், கோவை, திருநெல்வேலிக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் நியமனம்தாம்பரம், கோவை, திருநெல்வேலிக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் உள்பட 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:பெயர்    பழைய பதவி    புதிய பதவிஅமல்ராஜ்    சென்னை ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாடமி    தாம்பரம் போலீஸ் கமிஷனர்கண்ணன்    காத்திருப்போர் பட்டியல்    சென்னை ஆயுதப்படை ஐஜிதேன்மொழி    சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர்    வடக்கு மண்டல ஐஜிமகேஸ்வரி    சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐஜி    சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர்பாலகிருஷ்ணன்    மத்திய மண்டல ஐஜி    கோவை மாநகர போலீஸ் கமிஷனர்அவினாஷ் குமார்    காத்திருப்போர் பட்டியல்    திருநெல்வேலி போலீஸ் கமிஷனர்ஜெயகவுரி    சென்னை சிபிசிஐடி ஐஜி    சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் இயக்குனர்சந்தோஷ்குமார்    திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர்    மத்திய மண்டல ஐஜி…

The post தமிழகம் முழுவதும் 7 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 36 பேர் அதிரடியாக பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Home Secretary ,Prabhagar ,Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...