×

உக்ரைனில் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல்: ரஷ்யா மீண்டும் ஆவேசம்

கீவ்: உக்ரைன் தலைநகரமான கீவ் மீது ரஷ்ய ராணுவம் ஒரு மாதத்துக்குப் பிறகு நேற்று முதல் மீண்டும் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அதன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி தாக்குலை தொடங்கியது. தற்போது, இந்த போர் 100 நாட்களைத் தாண்டி தொடர்கிறது. உக்ரைன் தலைநகரமான கீவ் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள், கடந்த ஏப்ரல் இறுதியில் தாக்குதலை நிறுத்தி விட்டு பின்வாங்கியது. கிழக்கு உக்ரைனில் மட்டுமே தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள டார்னிட்ஸ்கி, நீப்ரோவ்ஸ்கி நகரங்களின் மீது ரஷ்யா நேற்று முதல் ஏவுகணைகள் வீசி ஆவேசமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கிடங்கு ஒன்று மிகவும் சேதமடைந்தது. காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கீவ் மேயர் விடாலி லிட்ஸ்ச்கோ தனது டெலிகிராம் பதிவில், `கடந்த ஏப்ரல் 28ம் தேதி ஐநா பொது செயலர் அன்டோனியோ கட்டரெஸ் வந்து சென்ற பிறகு நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலினால் இப்பகுதியில் அமைதி சீர் குலைந்துள்ளது,’ என கூறியுள்ளார். இந்நிலையில், உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கக் கூடாது என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் நேற்று கடும் எச்சரிக்கை விடுத்தார்….

The post உக்ரைனில் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல்: ரஷ்யா மீண்டும் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Volley ,Kiev ,Ukraine ,Russia ,Volley Attack ,Dinakaran ,
× RELATED உக்ரைன் மீது தாக்குதலை...