வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.இந்நிலையில் முருகனுக்கு 6 நாட்கள் அவசர விடுப்பு வழங்க வேண்டும் என நளினியும், அவரது தாயார் பத்மாவும் சிறை நிர்வாகத்துக்கு கடந்த வாரம் மனு அளித்தனர். அந்த மனுக்களை பரிசீலனை செய்து சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அப்துல்ரகுமான், ‘‘சிறையில் விதிமீறி செல்போன் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அவருக்கு பரோல் வழங்க தகுதி பெறவில்லை’’ என கூறி மனுவை நிராகரித்துள்ளார்….
The post ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகனுக்கு பரோல் கோரிய நளினியின் மனு நிராகரிப்பு appeared first on Dinakaran.
