×

கீழடி அகழாய்வில் கூடுதல் குழிகள் தோண்டும் பணி துவக்கம்

திருப்புவனம்: கீழடி 8ம் கட்ட அகழாய்வில் கூடுதலாக குழிகள் தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. பிப்.13ம் தேதி தொடங்கிய அகழாய்வில் இதுவரை 5 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் நீள் வடிவ தாயக்கட்டை, பாசி, சுடுமண் காதணிகள், சுடுமண் பானைகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. கீழடியில் ஐந்து குழிகள், அகரம், கொந்தகையில் தலா 2 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அகழாய்வு பணிக்காக தமிழக தொல்லியல் துறை சார்பில் நான்கு மீட்டர் நீள, அகலத்தில் குழிகள் தோண்டப்படும். குறிப்பிட்ட ஆழத்தில் ஆற்று மணல் அடுக்கு வெளிப்பட்டால் அகழாய்வு பணிகளை நிறுத்தி விட்டு கூடுதல் குழிகள் தோண்டப்படுவது வழக்கம். கீழடி, அகரத்தில் இதுவரை தோண்டப்பட்ட மொத்தம் 7 குழிகளில் மண் அடுக்கு உறை கிணறுகள் வெளிப்பட்டதை தொடர்ந்து இரண்டு தளங்களிலும் கூடுதலாக தலா இரண்டு குழிகள் தோண்டும் பணி நேற்று தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் வரை பணிகள் நடைபெற உள்ள நிலையில், இன்னமும் கூடுதலாக குழிகள் ஆய்வு பணிக்காக தோண்டப்படுமென தெரிகிறது….

The post கீழடி அகழாய்வில் கூடுதல் குழிகள் தோண்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Thirupuvanam ,Sivagangai District ,Keezadi ,
× RELATED தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது?...