×

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை தூதர் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை இலங்கை தூதர் மிலின்டா மொரகொடா சந்தித்து பேசினார். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் இதுதொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து கடந்த மாதம் 18ம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கப்பல் 23ம் தேதி கொழும்பு சென்றடைந்தது. தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நன்றி தெரிவித்தார்.  இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, இலங்கை தூதர் மிலின்டா மொரகொடா சந்தித்து பேசினார். அப்போது, தமிழகம் – இலங்கை இடையிலான உறவு, மீனவர்கள் பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இலங்கை மக்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்….

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை தூதர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,Ambassador ,Milinda Morakoda ,M.K.Stalin ,Chennai Secretariat ,Sri Lanka ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...