×

இன்ஸ்டாகிராமில் லைக்குகளை பெறுவதில் தகராறு கல்லூரி மாணவனை வெட்டிய சிறுவன் உட்பட 5 பேர் கைது

பல்லாவரம்: முடிச்சூரை சேர்ந்தவர்கள் சார்லஸ் (19), பிரியதர்ஷன் (19). சிறு வயதிலிருந்தே நண்பர்களான இவர்கள், பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் 2ம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள், இன்ஸ்டாகிராமில் தங்களது புகைப்படம், வீடியோக்களை போட்டி போட்டு பதிவு செய்து வந்தனர். இதில், சார்லஸ் பதிவுக்கு மட்டும் அதிக லைக்குகள் வந்துள்ளது. இதனால், சக மாணவ, மாணவிகள் மத்தியில் பிரபலமடைந்தார். இதில் ஆத்திரமடைந்த பிரியதர்ஷன், சார்லசை அழைத்து, இனிமேல் நீ இன்ஸ்டாகிராமில் எதுவும் பதிவு செய்யக்கூடாது, என்று கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரியதர்ஷன், கடந்த 23ம் தேதி கல்லூரியின் வெளியே தனது நண்பர்களுடன் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சார்லசை வெட்ட முயன்றார். அவர் தப்பியதால், அவரது நண்பர் என நினைத்து அதே கல்லூரியில் விஸ்காம் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த பிரணவ் (19), புது பெருங்களத்தூர், முத்தமிழ் நகர், குண்டு மேடு பகுதியை சேர்ந்த தமிழரசு (19), அதே பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுவன், புது பெருங்களத்தூர் பாரதி நகரை சேர்ந்த நந்தகுமார் (19), சந்தோஷ் (19) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரியதர்ஷன் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்….

The post இன்ஸ்டாகிராமில் லைக்குகளை பெறுவதில் தகராறு கல்லூரி மாணவனை வெட்டிய சிறுவன் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Instagram ,Pallavaram: ,Charles ,Priyadarshan ,Mudichur ,Pallavaram Radial Road ,
× RELATED “Divorce” பர்ஃப்யூம் அறிமுகம்.. விவாகரத்து...