×

அனிமல் 2ல் ராஷ்மிகா நீக்கமா?

மும்பை: கடந்த ஆண்டு இந்தி உள்பட பல மொழிகளில் வெளியாகி, பல்வேறு தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் மீறி மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலில் சாதனை படைத்திருந்த படம், ‘அனிமல்’. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், திரிப்தி டிம்ரி நடித்திருந்தனர். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்த ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கியவர், சந்தீப் ரெட்டி வங்கா.

பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இப்படமும் பல்வேறு தரப்பினரின் கடுமையான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களைச் சந்தித்தது என்றாலும், பெரிய வெற்றிபெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இதை இந்தியில் ஷாஹித் கபூர் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா ரீமேக் செய்து இயக்கினார். இந்நிலையில், ‘அனிமல்’ படத்தின் 2ம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரன்பீர் கபூர் பேசுகையில், ‘நான் ‘ராமாயணம்’, ‘லவ் அன்ட் வார்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். இப்படங்களை முடித்துவிட்டு, வரும் 2026ல் ‘அனிமல்’ 2ம் பாகம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்’ என்றார். 2வது பாகத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாரா என்பது பற்றி அவர் சொல்லவில்லை.

The post அனிமல் 2ல் ராஷ்மிகா நீக்கமா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rashmika ,Mumbai ,Sandeep ,Reddy Banga ,Ranbir Kapoor ,Rashmika Mandana ,Anil ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சாலைகள் மக்களை இணைக்கிறது பாராட்டிய...