×

யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலீஸ் மனு தள்ளுபடி

சென்னை: யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் சார்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். சென்னை ஆவடியை சேர்ந்த கார்த்திக் கோபிநாத், கோயிலை சீரமைக்க போவதாக லட்சக்கணக்கில் பணம் வசூலித்த புகார் கைதானார்.  ஜாமீன் கோரி கார்த்திக் கோபிநாத் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று பூந்தமல்லி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கு முன்னதாக கார்த்திக் கோபிநாத் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், புழல் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற வளாகத்திலும் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாஜவினரும் அதிக அளவில் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர். இதனையடுத்து கார்த்திக் கோபிநாத் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்….

The post யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலீஸ் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Karthik Gopinath ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...