×

போதையில் தூங்கிய தந்தையால் விபரீதம் இரவில் பூங்காவுக்கு சென்ற 4 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி மாணவனுக்கு வலைவீச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 4 வயது சிறுமியை பூங்காவிற்கு அழைத்து சென்ற தந்தை போதையில் தூங்கிவிட்டதால், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மாணவனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக நேற்று முன்தினம் இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கணவரும் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து, 4 வயது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கணவரிடம் தெரிவித்துள்ளார். போதையிலிருந்த கணவர் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். பூங்காவில், சிறுமி விளையாடிக்கொண்டிருந்தநேரத்தில் போதையிலிருந்த தந்தை ஆழ்ந்து தூங்கியுள்ளார். இதை அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் சிறுவன் கவனித்துள்ளான். பிறகு அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம்  செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான். இதையடுத்து, சிறுமியை பெற்றோர்கள் தேட தொடங்கினர். ஒரு வழியாக அழுகை குரலைக் கேட்டு சிறுமியை கண்டுபிடித்த பெற்றோர் அவளின் நிலையைக் கண்டு கதறினார்கள். இதில், சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் இந்த கொடூரத்தை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அந்த மாணவன் கடந்த பிப்ரவரி மாதத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு தலைமறைவான மாணவனை தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  …

The post போதையில் தூங்கிய தந்தையால் விபரீதம் இரவில் பூங்காவுக்கு சென்ற 4 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி மாணவனுக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipura ,
× RELATED புத்தாண்டு நாளில் வணிகர்கள் தலையில்...