×

ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்? :ஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத் பேச்சு

நாக்பூர் : இந்தியா ஒரு மதம், ஒரு மொழி மீது நம்பிக்கை கொண்ட நாடு இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.  நாக்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத்,’ஞானவாபி மசூதி – காசி விஸ்வநாதர் கோயில் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும். இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் ஒன்றாக அமர்ந்து பிரச்னையை சமரசமாக தீர்த்துக்கொள்ள வேண்டும். ஞானவாபி மசூதி – காசி விஸ்வநாதர் ஆலய சர்ச்சையில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்களும் முஸ்லிம்களும் வரலாற்று உண்மைகளை வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்துக்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஒருபோதும் நினைப்பதில்லை. இன்றைய முஸ்லிம்களின் முன்னோர்களும் இந்துக்களே ஆவர். ஞானவாபி மீது நமக்கு நிறைய பக்தி உள்ளது.. அதனால்தான் நாம் ஏற்கனவே அங்கு வழிபட்டு கொண்டிருக்கிறோம்.. ஆனால் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். இதனிடையே வாரணாசி நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த கியான்வாபி மசூதி விசாரணை, நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது….

The post ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்? :ஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Shivalinga ,RSS ,Mohan Bhagwat ,Nagpur ,India ,Shiva Lingam ,Dinakaran ,
× RELATED அத்வானி போல் அரசியலில் இருந்து மோடி 75...