×

மீன் பிடி தடைக்காலம் தொடங்கியதால் கரை திரும்பிய விசைப்படகுகளில் நாக்கண்டம், கணவாய் மீன்கள்

குளச்சல் :  மீன்களின்  இனப்பெருக்க  காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள்  தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும்  ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 15 ம் தேதிவரை மீன் பிடி தடை காலமாகும்.மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை  கிராமங்களில் கடந்த 31 ம் தேதி  நள்ளிரவு முதல் விசைப்படகுகள் மீன்  பிடிக்க தடை  தொடங்கியது. இந்த தடை ஜூலை 31ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.குளச்சல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன. இந்த தடை காலத்தில்  விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளில் இன்ஜின்களை பழுது பார்ப்பது, பெயின்ட் அடிப்பது, பேட்டரி மற்றும் ஓயரிங்  சீரமைக்கும் பணியில்  ஈடுபடுவர். குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் விசைப்படகுகளுக்கு தடை தொடங்கி உள்ளதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மேற்கு கடற்கரை விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பி உள்ளன. குளச்சல் கடல் பகுதியில் அனைத்து  விசைப்படகுகளும் கரை திரும்பிவிட்டன . அவை மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 31ம் தேதி நள்ளிரவு கரை திரும்பிய விசைப்படகுகளிலிருந்து நேற்றுவரை மீன்கள் இறக்கி வியாபாரம் செய்யப்பட்டது. அதில் ஒரு படகில் தக்காளி பேளை மீன்கள் கிடைத்தன. வேறு படகுகளில் நாக்கண்டம், கணவாய் போன்ற மீன்கள் கிடைத்திருந்தன.இந்த மீன்களுக்கு சென்னை, திண்டுக்கல், கோவில்பட்டி, கோயம்புத்தூர் போன்ற வெளியூர் மீன் மார்க்கெட்டுகளில் மவுசு உள்ளதால் வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். தவிர இந்த மீன்களிலிருந்து எண்ணெய்யும் எடுக்கப்படுவதால் மீன் எண்ணெய் ஆலையினரும் வாங்கி சென்றனர்….

The post மீன் பிடி தடைக்காலம் தொடங்கியதால் கரை திரும்பிய விசைப்படகுகளில் நாக்கண்டம், கணவாய் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,government ,Kumari district ,Nakkandam ,Ganavai ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் வாகனம் ஓட்டிய 33 பேருக்கு ₹10 ஆயிரம் அபராதம்