×

கேரள மாநிலம் திரிகாகரை சட்டமன்ற இடைத்தேர்தலில் காங். கட்சி வேட்பாளர் உமா தாமஸ் அபார வெற்றி: தோல்வியை தழுவியது பாஜக..!!

எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திரிகாகரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமா தாமஸ் வெற்றிபெற்றார். திரிகாகரை எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.டி.தாமஸ், கடந்த டிசம்பர் மாதம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதனால் இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக உயிரிழந்த எம்.எல்.ஏ.வின் மனைவி உமா தாமஸ் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர். ஜூன் 1ம் தேதி திரிகாகரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார்  68.75 சதவீத வாக்குகள் பதிவானது. முடிவுகள் ஜூன் 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வாக்குகள் எண்ணப்பட்டதில் காங்கிரசின் உமா தாமஸ் 72,770 வாக்குகள் பெற்று திரிக்காகரை இடைத்தேர்தலில் அபார வெற்றிபெற்றார். 2021 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு வித்தியாசமான 14,329 ஐ விட தற்போது 10,687 வாக்குகளுக்கு மேல் உமா தாமஸ் கூடுதலாக பெற்றுள்ளார். முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் பிரச்சாரம் செய்தபோதும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜோ ஜோசப் தோல்வியடைந்தார். 2021 தேர்தலில் திரிக்காகரை தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகளை விட இடைத்தேர்தலில் 2,526 வாக்குகள் குறைந்துவிட்டன. 2021 தேர்தலில் பாஜக 15,483 வாக்குகள் பெற்ற நிலையில் தற்போது அக்கட்சி வேட்பாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் 12,957 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். …

The post கேரள மாநிலம் திரிகாகரை சட்டமன்ற இடைத்தேர்தலில் காங். கட்சி வேட்பாளர் உமா தாமஸ் அபார வெற்றி: தோல்வியை தழுவியது பாஜக..!! appeared first on Dinakaran.

Tags : Kerala State Trigagarai Assembly ,Inter ,Election ,Cong. party ,Uma Thomas ,BJP ,Ernakulam ,Congress party ,Ernakulam, Kerala ,Thrikagarai ,Assembly ,Constituency ,Kerala State Trigagarai Assembly Inter- ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...