×

அஞ்சலி நாயர் நடிக்கும் ஒய்ஃப்

சென்னை: ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்க, ஆர்.ஹேமநாதன் இயக்கியுள்ள படம், ’ஒய்ஃப்’. இதில் விஜே விஜய், அஞ்சலி நாயர், மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் நடிக்கின்றனர்.கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படம் குறித்து ஆர்.ஹேமநாதன் கூறியதாவது:

கணவன், மனைவிக்கு இடையிலான நேசத்ைத மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. சதுரங்க விளையாட்டில் ராணிக்கு எப்படி அசைக்க முடியாத சக்தி இருக்கிறதோ, அதுபோல் ஒவ்வொரு வீட்டிலும் மனைவி தன் குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். திருமணத்துக்குப் பிறகு மலரும் அன்பை எமோஷனலாக சொல்வதே என் நோக்கம். இதுவரை ‘ஒய்ஃப்’ என்ற படத்தலைப்பை யாரும் சூட்டவில்லை என்றபோது ஆச்சரியமாக இருந்தது. தற்போது அத்தலைப்பு எனக்கு கிடைத்துள்ளது.

The post அஞ்சலி நாயர் நடிக்கும் ஒய்ஃப் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anjali Nair ,R. Hemanathan ,S. Ambed Kumar ,VJ Vijay ,Maitreyan ,Redin Kingsley ,Kalyani Natarajan ,Vijay Babu ,Lallu ,Kathir ,KA Sakthivel ,Jen Martin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹைபர் லூப் கதையில் 3 ஹீரோ, 3 ஹீரோயின்கள்