×

காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி தவணை காலம் முடிவுக்கு வந்தது தமிழகத்துக்கு 280 டிஎம்சி காவிரி நீர் கிடைத்துள்ளது: 103 டிஎம்சி நீர் கூடுதலாக வந்தது; நீர்வளத்துறை உயரதிகாரி தகவல்

சென்னை: காவிரி நடுவர் மன்ற உத்தரவின் படி தவணை காலம் முடிவுக்கு வந்த நிலையில், தமிழகத்துக்கு 280 டிஎம்சி காவிரி நீர் கிடைத்துள்ளது. கடந்தாண்டில் மட்டும் 103 டிஎம்சி நீர் கூடுதலாக வந்துள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தவணைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி ஆண்டுக்கு 177 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கர்நாடகா அரசு தர வேண்டும். இந்த நிலையில் நடப்பாண்டு தவணைகாலத்தில் ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சியில் 7.69 டிஎம்சியும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சியில் 27.98 டிஎம்சியும், ஆகஸ்ட்டில் 45.95 டிஎம்சியில் 22.64 டிஎம்சியும், செப்டம்பர் மாதத்தில் 36.76 டிஎம்சியில் 33.13 டிஎம்சியும், அக்டோபர் மாதத்தில் 20.22 டிஎம்சியில் 48.27 டிஎம்சியும், நவம்பர் மாதத்தில் 13.78 டிஎம்சியில் 71.56 டிஎம்சியும், டிசம்பரில் 7.35 டிஎம்சியில் 26.18 டிஎம்சியும், ஜனவரியில் 2.67 டிஎம்சியில் 6.4 டிஎம்சியும், பிப்ரவரி மாதத்தில் 2.5 டிஎம்சியில் 3.11 டிஎம்சியும், மார்ச் மாதத்தில் 2.5 டிஎம்சியில் 5.2 டிஎம்சியும், ஏப்ரல் மாதத்தில் 2.5 டிஎம்சியில் 5.8 டிஎம்சியும், மே மாதத்தில் 2.5 டிஎம்சியில் மே மாதத்தில் வரை 2.50 டிஎம்சியில், 22 டிஎம்சி என மொத்தம் 177 டிஎம்சியில் 280.4 டிஎம்சி தந்துள்ளது. இந்த தவணை காலத்தில் 103.39  டிஎம்சி நீர் கூடுதலாக கர்நாடகா தந்துள்ளது.தற்போது, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்துக்கு, நடப்பு தவணை காலத்திலும் ஒப்பந்த அளவை காட்டிலும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

The post காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி தவணை காலம் முடிவுக்கு வந்தது தமிழகத்துக்கு 280 டிஎம்சி காவிரி நீர் கிடைத்துள்ளது: 103 டிஎம்சி நீர் கூடுதலாக வந்தது; நீர்வளத்துறை உயரதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Caviri Arbitration Court ,Tamil Nadu ,Caviri ,Chennai ,Caviri arbitration council ,Kaviri Arbitration Court ,Dinakaran ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...