×

குட்நைட் மிதா ரகுநாத் ரகசிய திருமணம்

சென்னை: ‘முதல் நீ முடிவு நீ’ என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவி கேரக்டரில் நடித்து முதல் படத்திலேயே நல்ல நடிகை என்ற பெயரை எடுத்தவர் மீதா ரகுநாத். அதன் பிறகு ‘குட்நைட்’ திரைப்படத்தில் நடித்த அவர் மணிகண்டனுக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருந்தார்.

இந்த நிலையில் அடுத்தடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதாக கூறி, நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு திருமணம் ஆகி உள்ள நிலையில் திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த திருமணம் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. மீதா ரகுநாத்தை திருமணம் செய்தவர் அவரது நீண்ட நாள் நண்பர் என்றும் இருவரும் சில வருடங்களாக காதலித்ததாக கூறப்படுகிறது. மீதா ரகுநாத்துக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post குட்நைட் மிதா ரகுநாத் ரகசிய திருமணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mitha Raghunath ,CHENNAI ,Meetha Raghunath ,Manikandan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...