×

என் கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஷ்கின்: இயக்குனர் விஷால் நெகிழ்ச்சி

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருந்த ‘துப்பறிவாளன்’ என்ற படம் கடந்த 2017ல் திரைக்கு வந்தது. இதையடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தில் மீண்டும் அவர்கள் பணியாற்றியபோது கருத்து வேறுபாடு ஏற்பட்டு, படத்தில் இருந்து மிஷ்கின் உடனே நீக்கப்பட்டார். பிறகு நடிகர் விஷால், ‘இப்படத்தை நானே இயக்குவேன். இனி மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்’ என்றார். அதன்படி ‘துப்பறி வாளன் 2’ படத்தை விஷால் இயக்கி நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறி யிருப்பதாவது: கடந்த 25 வருடங்களாக ஹீரோவாகப் பயணித்து வரும் என் வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது. என் கனவு, ஆசை, லட்சியம் எல்லாம் இப்போது நிஜமாகியுள்ளது. அறிமுக இயக்குனராக, அதிகமான சவால்கள் நிறைந்த பொறுப்பை ஏற்றுள்ளேன். நான் இயக்கும் ‘துப்பறிவாளன் 2’ (டிடெக்டிவ் 2) படத்துக்காக லண்டன், அஜர்பைஜான், மால்டா ஆகிய இடங்களுக்கு செல்கிறேன்.

இதைப்பற்றி விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. எனது தந்தை தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டி, நடிகர் அர்ஜூன் ஆகியோர் சொன்னதைப்போல், கடுமையான உழைப்பு எப்போதும் வீண்போகாது. எது வந்தாலும் கவலையில்லை என்று நமது கனவுகளை விடாமுயற்சியுடன் தொடரும்போது, ஒருநாள் நிஜமாக மாறும். அவர்களுக்கு என் நன்றி. ஒரு திறமையான இயக்குனராக உங்கள் பெயரை நான் காப்பாற்றுவேன்.

நடிகன் என்ற அடையாளத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இயக்குனராகும் எனக்கு ஆதரவு தொடரும் என்று நம்புகிறேன். என் கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஷ்கினுக்கு நன்றி. கவலைப்படாதீர் கள், நிஜ வாழ்விலும், திரை வாழ்விலும் யார் குழந்தையையும் நான் கைவிட மாட்டேன். உங்களது குழந்தையான ‘துப்பறிவாளன் 2’ஐ தத்தெடுத்த நான், அதை உங்கள் இலக்கை அடையும் படி செய்வேன். இப்போது கடவுள் ஆசியுடன் வேலைக்குச் செல்கிறேன்.

The post என் கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஷ்கின்: இயக்குனர் விஷால் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Myshkin ,Vishal Leschi ,Chennai ,Vishal ,Mishkin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...