×

கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்

சென்னை: கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் ‘இனிமேல்’ என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் ராஜ்கமல் நிறுவனம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இதில் லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இனிமேல்’ பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் பாடலாகும்.

ஸ்ருதி ஹாசன் பாடி, இசையமைத்துள்ள இனிமேல் பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடல் தற்போதைய தலைமுறையில் காதல் இயங்கும் விதத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. ‘எட்ஜ்’, ‘ஷீ இஸ் எ ஹீரோ’ மற்றும் ‘மான்ஸ்டர் மெஷின்’ போன்ற வெற்றிகரமான சுயாதீன ஆல்பம் பாடல்களை ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lokesh Kanagaraj ,Kamal ,CHENNAI ,Kamal Haasan ,Raj Kamal Films International ,Shruti Haasan ,Vikram ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...