×

பட புரமோஷனுக்காக கிசுகிசு கிளப்ப நினைச்சோம்: விஜய் ஆண்டனி ஓபன் டாக்

சென்னை: விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ‘ரோமியோ’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ரவி நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரம்ஜான் தினத்தில் வெளியிடுகிறது. நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, ‘மிருணாளினி தன்மையான நல்ல பொண்ணு. படத்தை புரோமோட் பண்ண எங்களை பத்தி கிசுகிசு கிரியேட் பண்ணலாமா என யோசித்தோம். ஆனால், எதுவுமே வொர்க்கவுட் ஆகவில்லை. முதன்முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன்.

ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதை பொறுத்துக் கொள்கிறது என்பதுதான் கதை. குடும்பத்தோடு நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்’ என்றார். நடிகை மிருணாளினி ரவி பேசும்போது, ‘ரோமியோ’ படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். பட வாய்ப்பு என்பதை விட இதை பொறுப்பாகவே பார்க்கிறேன். விஜய் ஆண்டனி சார் மல்டி டாஸ்கிங் நபர். பல விஷயங்கள் அவரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நான் முதல்முறையாக டப்பிங் செய்திருக்கிறேன். பர்சனலாக என்னுடன் இந்த கதையை ரிலேட் செய்து கொண்டேன். தலைவாசல் விஜய் சார் எனக்கு ஸ்ட்ரிக்ட்டான அப்பாவாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரம்ஜானுக்கு படம் பாருங்கள்’ என்றார்.

The post பட புரமோஷனுக்காக கிசுகிசு கிளப்ப நினைச்சோம்: விஜய் ஆண்டனி ஓபன் டாக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Antony ,Chennai ,Vinayak Vaidyanathan ,Mrinalini Ravi ,Yogi Babu ,VTV Ganesh ,Thalivasal ,Vijay ,Prince ,Sudha ,Ravi ,Vijay Antony Film Corporation… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சீனியர்களுடன் நடிக்கும்போது பதற்றமாக...