×

விஜய்யின் கோட் டில் இணைந்த திரிஷா

சென்னை: விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பார்வதி என நான்கு நாயகிகள் நடித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் திரிஷா நடித்திருப்பதாகவும் அவருடைய காட்சி இரண்டு நாட்கள் படமாக்கப்பட்டதாகவும் பட வட்டாரம் கூறியுள்ளது.

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய், அப்பா, மகன் என இரண்டு வித்தியாசமான வேடத்தில் நடித்து வரும் நிலையில் ஒரு வேடம் நெகட்டிவ் வேடம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அப்பா கேரக்டர் தான் நெகட்டிவ் வேடம் என்றும் அவருக்கு ஜோடியாகத் தான் திரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் விஜய்க்கும் திரிஷாவுக்கும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் ரகசியமாக நடந்ததாகவும் கூறப்படுகிறது.

The post விஜய்யின் கோட் டில் இணைந்த திரிஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Trisha ,Vijay ,CHENNAI ,Sneha ,Laila ,Meenakshi Chaudhary ,Parvathy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மகனை அடித்துவிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறேன்: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி