×

2 ஆண்டுகளுக்கு பிறகு வினீத் சீனிவாசனை பாராட்டிய பிருத்விராஜ்

சென்னை: கடந்த 2022 நவம்பர் மாதம் மலையாளத்தில் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ என்கிற படம் வெளியானது. நடிகரும் இயக்குனருமான வினீத் சீனிவாசன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் என்பவர் இயக்கியிருந்தார். மருத்துவமனைகளில் இன்சூரன்ஸ் பணத்தை குறிவைத்துத் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக உருவாகி இருந்த இந்த படத்தில் வினீத் சீனிவாசன் நெகட்டிவ் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் டப்பிங் செய்யப்பட்டு, பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தை நடிகர் பிருத்விராஜ் பார்த்துள்ளார். இது குறித்து சோஷியல் மீடியா பக்கத்தில் பிருத்விராஜ் கூறியது:

இந்த படம் வெளியான சமயத்தில் இருந்தே நான் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்டில் தான் இடம் பிடித்திருந்தது. ஆனாலும் சில காரணங்களால் என்னால் எப்படியோ பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்போதுதான் இந்த படத்தை பார்த்தேன். அவ்வளவு அற்புதமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறீர்கள். முகுந்தன் உன்னி என்னை ரொம்பவே கவர்ந்து விட்டான். தாமதமாக பார்த்ததற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய (வினீத் சீனிவாசன்) அடுத்த படம் எப்போது வெளியாகும் என்கிற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

The post 2 ஆண்டுகளுக்கு பிறகு வினீத் சீனிவாசனை பாராட்டிய பிருத்விராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prithviraj ,Vineeth Srinivasan ,Chennai ,Abhinav Sundar Naik ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சலார் 2வில் கியரா