×

வேதாரண்யம் பகுதியில் கூண்டு வைத்து குரங்கு பிடிக்கும் பணி தீவிரம்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமான், புள்ளிமான் 500க்கும் மேற்பட்ட குரங்குகள் நூற்றுக்கும் மேற்பட்ட மட்ட குதிரைகள் மற்றும் நரி, முயல், மயில் என வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பசுமைமாறா காட்டில் இயற்கையோடு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கியது. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள குரங்குகளுக்கு தின்பண்டங்கள், உணவுகள் கொடுக்க தொடங்கினர். நாளடைவில் இயற்கையாக வாழும் தன்மையை இழந்து ரோடுகளில் குரங்குகள் சுற்றுலா பயணிகள் தரும் உணவிற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது வனத்துறையினர் குரங்குகளுக்கு தின்பண்டங்கள், உணவு வழங்க கூடாது என விளம்பரப் பதாதைகள் வைத்தும், சுற்றுலாப் பயணிகளை எச்சரித்தனர். ஆனாலும் குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவு கொடுத்து வருகின்றனர். இதனால் கோடியக்கரை பகுதியில் இருந்து குரங்குகள் வெளியேறி வேதாரண்யம், தோப்புத்துறை, ஆதனூர், நெய்விளக்கு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்கேயே தங்கி விட்டது. வேதாரண்யம் மற்றும் தோப்புத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் பொது மக்களை அச்சுறுத்துவதும், வீடுகளிலிருந்து உணவுகளை எடுத்துக் உண்பது வீட்டின் ஓடுகளை பிரிப்பது பலன்தரும் மரங்களை சேதபடுத்தவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்தன. இவ்வாறு பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருந்த குரங்களை பிடிக்ககோரிக்கை விடுக்கப்பட்டது.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குரங்குகளை பிடிக்க வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா கோடியக்கரை வனசரகர் அயூப்கான், வனவர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் தோப்புத்துறையில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த இரும்பு கூண்டில் நான்கு குரங்குகள் பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக கோடியக்கரையில் வனச்சரகத்தில் விடப்பட்டது….

The post வேதாரண்யம் பகுதியில் கூண்டு வைத்து குரங்கு பிடிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Vedaranyam Taluk Kodiyakarai ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...