×

4.81 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ரூ.4.81 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.டெல்லி சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவர் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் கடந்த 2015ம் ஆண்டு அரசு ஊழியராக இருந்த போது அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் போலி நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ரூ.4.81 கோடி சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கில் அமைச்சரின் குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களை இணைத்தனர். 2017ல் தொடரப்பட்ட இந்த வழக்கு தற்போது வேகப்படுத்தப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு ஹவாலா மூலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள் பணப்பரிமாற்றம் செய்தனர். இந்த பணத்தின் மூலம் அவர்கள் நிலங்களில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ ஏற்கனவே 2018 டிசம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த சூழலில் இந்த ஆண்டு ஜனவரியில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துைற கைது செய்ய வாய்ப்புள்ளதாக ஆம் ஆத்மி கூறியது. அப்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இப்போது அமலாக்கத்துறை நேற்று அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்தது. விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு கைது செய்ததாக அமலாக்கத்துறை அறிவித்தது. முறையான பதில் அளிக்க மறுப்பதால் ஜெயின் கைதானதாக கூறப்படுகிறது. இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இமாச்சல் தேர்தல் தோல்வி பயத்தால் கைதுஅமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது தொடர்பாக பதிலளித்த துணை முதல்வர் சிசோடியா கூறுகையில், ‘‘இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளராக இருப்பதாலும், தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சம் பாஜவுக்கு உள்ளதாலும், 8 ஆண்டு கால போலி வழக்கில் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். சத்யேந்தர் ஜெயின் மீது எட்டு வருடங்களாக ஒரு போலி வழக்கு நடந்து வருகிறது. இதுவரை பலமுறை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது. அவருக்கு எதிராக எதுவும் கிடைக்காததால் சில காலமாக அவருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பை நிறுத்தியது. இப்போது அது மீண்டும் தொடங்கியுள்ளது. அவர் விரைவில் விடுவிக்கப்படுவார்’’ என்றார்….

The post 4.81 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Delhi Minister Satyender Jain ,New Delhi ,Enforcement Department ,Delhi Health Department ,
× RELATED நீரிழிவு பாதித்துள்ள கெஜ்ரிவால்...