×

கார்த்தியுடன் இணைந்த கவுதம் கார்த்திக்

சென்னை: நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடிக்கிறார். ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. இவரது இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக நடைபெற்று வந்தது. இதன் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இதில் கார்த்தியுடன் முக்கிய வேடத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்துக்கு பூஜை போடும் நிகழச்சி சென்னையில் நடந்தது. இதில் சூர்யா, கார்த்தி, சிவகுமார், கவுதம் கார்த்திக் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். படத்தில் நடிக்கும் ஹீரோயின் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

The post கார்த்தியுடன் இணைந்த கவுதம் கார்த்திக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Gautham Karthik ,Karthi ,Chennai ,Nalan Kumaraswamy ,Nanal Kumaraswamy ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு...