×

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி

சென்னை: மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது துருவ் விக்ரம் நடிக்க உள்ள கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது என்றும், இந்த படத்தில் துருவ் விக்ரம், கபடி வீரராக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்த ஆண்டு கார்த்தி படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்போது 96 பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை கார்த்தி முடித்துள்ளார். இதையடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தை அவர் தேர்வு செய்திருக்கிறார். சர்தார் 2விலும் நடிக்கிறார். இந்த படங்களையெல்லாம் முடித்த பிறகே மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பாராம். மேலும் கார்த்தி படத்தை முடித்துவிட்டு தனுஷ் நடிக்க உள்ள படத்தை மாரி செல்வராஜ் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

The post மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Karthi ,Mari Selvaraj ,Chennai ,Dhruv Vikram ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...