×

இடுப்பில் கை வைத்த ரசிகர் அலறினார் காஜல் அகர்வால்

சென்னை: ரசிகர் ஒருவர் இடுப்பில் கை வைத்ததால் காஜல் அகர்வால் அலறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் தனது 60வது படம் குறித்த அறிவிப்பையும் சில மாதங்களுக்கு முன்புதான் காஜல் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அவர் சினிமாவிலிருந்து விலகப்போவதாக வெளியான தகவலை மறுத்த காஜல், தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். விரைவில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுப்பதற்காக அருகில் வந்தார். அந்த சமயத்தில் காஜல் எதிர்பார்க்காதபோது அவரது இடையில் ரசிகர் கையை வைத்தார். இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த காஜல் அகர்வால் அலறினார். அந்த ரசிகரை பார்த்து, ‘என்ன இதெல்லாம்’ என்று கையை அசைத்தபடி கேள்வி கேட்டார். பிறகு அந்த ரசிகரை அங்கிருந்த பவுன்சர்கள் அப்புறப்படுத்தினர். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post இடுப்பில் கை வைத்த ரசிகர் அலறினார் காஜல் அகர்வால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kajal Aggarwal ,Chennai ,Kamal Haasan ,Shankar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...