×

நடிகர் அஜித் மருத்துவமனையில் திடீர் அனுமதி

சென்னை: நடிகர் அஜித் குமார் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‘துணிவு’ படத்துக்கு பிறகு ‘விடா முயற்சி’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் சென்னைக்கு வந்தார். இதற்கிடையே நேற்று காலை அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. காது உள்பட உடல் உறுப்புகளுக்கான சோதனையும் செய்துகொண்டார். மாலையில் அவர் வீடு திரும்புவார் என அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து அஜித் தரப்பில் கூறும்போது, ‘ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் ஓய்வு கிடைக்கும்போது, வழக்கமாக முழு உடல் பரிசோதனைகளை அஜித் மேற்கொள்வார். அதுபோலத்தான், இன்றும் அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அவர் நலமாக இருக்கிறார்’ என்றனர்.

The post நடிகர் அஜித் மருத்துவமனையில் திடீர் அனுமதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajith ,Chennai ,Ajith Kumar ,Azerbaijan ,Actor ,Hospital ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்