×

விக்ரம் படத்தில் இணைந்த மலையாள நடிகர்

சென்னை: மலையாளத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை 3 முறையும், கடந்த 2016ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றவருமான சுராஜ் வெஞ்சாரமூடு, விக்ரம் நடிக்கும் 62வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விக்ரம், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் எழுதி இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படம் உருவாக்கப்படுகிறது. இதில் சுராஜ் வெஞ்சாரமூடு இணைந்துள்ளார். மலையாளத்தில் ரிலீசான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’, ‘டிரைவிங் லைசென்ஸ்’, ‘ஜன கண மன’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஆகிய படங்களில் அவரது தனித்துவமான நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. தற்போது அவர் தமிழில் அறிமுகமாகிறார். இதை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ்சுக்காக ரியா ஷிபு தயாரிக்கிறார். பிரீ-புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

The post விக்ரம் படத்தில் இணைந்த மலையாள நடிகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : VIKRAM ,Chennai ,Suraj Venjaramoodu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வல்லவன் வகுத்ததடா விமர்சனம்