×

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு

சென்னை: டிஸ்னி ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும் புதிய படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான ‘ஒரு கிடாவின் கருணை மனு’ மற்றும் ‘சத்திய சோதனை’ படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்பி டாக்கீஸ் சார்பில் எஸ்.ஆர். ரமேஷ் பாபு மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ சார்பில் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து படத்தினை தயாரிக்கின்றனர். இதில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

The post சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yogi Babu ,Suresh Sangaiah ,CHENNAI ,Disney Hotstar ,Chandrasekhar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிரபாஸ் சல்மானுக்கு பிறகே எனக்கு...