×

கஞ்சா சங்கர் பூஜா ஹெக்டே படத்துக்கு எச்சரிக்கை

ஐதராபாத்: தெலுங்கில் சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கஞ்சா சங்கர்’. இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதை சம்பத் நந்தி இயக்குகிறார். இப்படத்தின் தலைப்புக்கு தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்பத் நந்தி, தயாரிப்பாளர் நாகவம்சி, சாய் தரம் தேஜ் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சந்தீப் சாண்டில்யா ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘இப்படத்தின் ஹீரோ கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவது போலவும், அவரது செயல்களை மற்றவர்கள் கொண்டாடுவது போலவும் காட்சிகளை உருவாக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தலைப்பில் இருக்கும் ‘கஞ்சா’ என்ற வார்த்தை மாணவர்கள், இளைஞர்கள், ரசிகர்களிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உடனே தலைப்பை மாற்ற வேண்டும். போதைப்பொருள் தொடர்பான ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருந்தால் அவற்றை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்விஷயம் தெலுங்கு படவுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கஞ்சா சங்கர் பூஜா ஹெக்டே படத்துக்கு எச்சரிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ganja Shankar Pooja Hegde ,Hyderabad ,Sai Dharam Tej ,Ganja Shankar ,Pooja Hegde ,Sampath Nandi ,Telangana Narcotics Control Unit ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்