×

ராஷ்மிகா,ஸ்ரத்தா உயிர் தப்பினர்

 

மும்பை: நடுவானில் விமானத்தில் திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டதால், உடனடி யாக தகவல் அளிக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டது. இதில் பயணிகள் உள்பட தானும், ஸ்ரத்தா கபூரும் உயிர் தப்பியதாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 4 ெமாழிகளில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர், ராஷ்மிகா மந்தனா. தற்போது ‘புஷ்பா 2’, ‘ரெயின்போ’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், நேற்று மும்பையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் உள்பட நிறைய பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில், விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட 30 நிமிடங்களில் திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது. இது உடனே கண்டுபிடிக்கப்பட்டு, விமானம் அவசரமாக மும்பைக்கு திருப்பிவிடப்பட்டு தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட ராஷ்மிகா மந்தனா, விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பியதாகவும் மற்றும் தானும், ஸ்ரத்தா கபூரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார். இச்சம்பவம் திரையுலகம் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post ராஷ்மிகா,ஸ்ரத்தா உயிர் தப்பினர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rashmika ,Shraddha ,MUMBAI ,Rashmika Mandhana ,Shraddha Kapoor ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அனிமல் 2ல் ராஷ்மிகா நீக்கமா?