×

சுற்றுச்சூழல் பாதிக்காத திருமணம்: ரகுல் பிரீத் திடீர் முடிவு

 

மும்பை: சுற்றுப்புறழலை பாதிக்காத வகையில், தனது திருமணத்தை ‘பசுமை திருமணம்’ என்ற பெயரில் நடத்த முடிவு செய்துள்ளார், ரகுல் பிரீத் சிங். அவரது திடீர் முடிவை அறிந்த வருங்கால கணவரும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். ன்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டில் விளம்பரங்கள், வெப்தொடர்கள், திரைப்படங்களில் பிசியாக நடித்து வருபவர், ரகுல் பிரீத் சிங். அவரும், பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதுகுறித்து 2021ல் தங்கள் சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருந்தனர். இந்நிலையில், வரும் 21ம் தேதி அவர்களின் திருமணம் கோவா கடற்கரை பகுதியிலுள்ள ரிசார்ட்டில் நடக்கிறது. இதில் இருவரது நெருங்கிய நண்பர்களும், றவினர்களும் மட்டும் நேரில் கலந்துகொள்கின்றனர்.

தொடர்ந்து 3 நாட்களுக்கு வெகுவிமரிசையாக நடக்கும் திருமண விழாவுக்கு அவர்கள் த்திரிகை அச்சடிக்கவில்லை. சிறப்பு விருந்தினர்களுக்கு இணையம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தங்கள் திருமண விழாவை சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடத்த வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றனர். இதனால், திருமண விழாவில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளனர். மேலும், தங்கள் திருமண நிகழ்வு மூலம் எவ்வளவு கார்பன் புட்பிரிண்ட்ஸ் உருவாகிறதோ, அதன் அடிப்படையில் மரங் களை நட திட்டமிட்டு உள்ளனர். திருமணம் முடிந்த சில நாட்களில் ரகுல் பிரீத் சிங், ஜாக்கி பக்னானி இருவரும் மரம் நடும் விழாவை நடத்த முடிவு செய்திருக்கின்றனர். முன்னதாக அவர்கள், மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். அந்த போட்டோ வைரலானது.

The post சுற்றுச்சூழல் பாதிக்காத திருமணம்: ரகுல் பிரீத் திடீர் முடிவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rahul Preet ,MUMBAI ,Rahul Preet Singh ,Bollywood… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!