×

ஹாட் ஸ்பாட் டில் 4 ஜோடிகளின் கதை

சென்னை: கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியர் பிலிம்ஸ் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ் குமார் தயாரிக்கும் படம், ‘ஹாட் ஸ்பாட்’. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘திட்டம் இரண்டு’, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘அடியே’ ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். கலையரசன், கவுரி கிஷன், சாண்டி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் சோபியா, அம்மு அபிராமி, ஜனனி அய்யர் நடிக்கின்றனர். சதீஷ் ரகுநாதன், வான் இணைந்து இசை அமைக்கின்றனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

அடுத்த மாதம் திரைக்கு வரும் இப்படம் குறித்து விக்னேஷ் கார்த்திக் கூறுகையில், ‘சமுதாயத்தில் அன்றாடம் நம் கண்முன் நடக்கும் சில அடிப்படை விஷயங்களைக்கூட தட்டிக்கேட்க தைரியம் இல்லாமல், அதை கவனிக்காதது போல் கடந்து செல்கிறோம். சமூகத்தில் இது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுபோன்ற விஷயங்களை 4 இளம் ஜோடிகள் இணைந்து அலசும் கதையுடன் படம் உருவாகியுள்ளது. மக்களைச்சுற்றி நடந்து வரும் அரசியலைக் குறித்து விவாதிக்கும் கதை இது. இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரின் மனதில் இப்படம் விழிப்புணர்வையும், தட்டிக்கேட்க வேண்டும் என்ற துணிச்சலையும் ஏற்படுத்தும்’ என்றார்.

The post ஹாட் ஸ்பாட் டில் 4 ஜோடிகளின் கதை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,KJ Palamani Marban ,Suresh Kumar ,KJP Talkies ,7 Warrior Films ,Vignesh ,Aishwarya Rajesh ,GV ,Prakash Kumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இன்றைய நிகழ்ச்சி சம்மர் ஸ்போர்ட்ஸ்...