×

தமிழில் வெளியாகும் மலையாள படம் அஞ்சாம் வேதம்

சென்னை: அறிமுக இயக்குநர் முஜீப் டி முகமது எழுதி இயக்கிய மலையாளத் திரைப்படமான ‘அஞ்சாம் வேதம்’ தமிழிலும் பிப்ரவரி 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ஹபீப் அபூபக்கர் தயாரித்துள்ளார், அஞ்சாம் வேதத்தின் வசனம் மற்றும் இணை இயக்கம் பினேஷ் ராஜ். சாகர் அய்யப்பன் ஒளிப்பதிவு இயக்குனர். முஜிப் டி முகமது கூறும்போது, ‘அஞ்சாம் வேதம் பல வகையான திரை அம்சங்கள் அடங்கிய படமாகும். இது அதன் கதைக்களத்தில் பல்வேறு மர்மமான முடிச்சுகளையும், புதிர்களையும், திருப்பங்களையும் கடந்து செல்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் மலைப்பாங்கான பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது’ என்றார்.

புதுமுகம் விஹான் விஷ்ணு நாயகன். நயன்தாராவின் அறம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமான சுனு லட்சுமி மலையாளத்தில் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். மாதவி, கேம்பஸ் போன்ற பல படங்களின் மூலம் தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த சஜித்ராஜ் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கல்லூரி நாட்கள், பிரமுகன் போன்ற சில படங்கள் மூலம் மலையாளிகளுக்கும் அறிமுகமானவர் சஜித்ராஜ். தமிழில் இலை மற்றும் சாத்தான் படத்தின் மூலம் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அறிமுகமான பினீஷ் ராஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அஞ்சாம் வேதம் தமிழிலும் வெளியாகிறது.

The post தமிழில் வெளியாகும் மலையாள படம் அஞ்சாம் வேதம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Mujeeb D Mohammed ,Habib Abubakar ,Anjam Veda ,Pinesh Raj.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...